[X] Close

ஐ.நா.வின் தீர்மானங்களை மீறும் வடகொரியா: அமெரிக்கா


  • kamadenu
  • Posted: 29 May, 2019 16:53 pm
  • அ+ அ-

ஏவுகணை சோதனையில் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை வடகொரியா மீறுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஒர்டேகாஸ் கூறும்போது,”வடகொரியாவின் ஒட்டுமொத்த அணு ஆயுத சோதனைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களிலிருந்து முரண்படுகின்றன.

அமெரிக்கா, வடகொரியாவுடன் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் அணு ஆயுத சோதனைகள் முடிவுக்குக் கொண்டுவரும் சாதகமான உறவையே விரும்புகிறது.நாங்கள் இதனை பலமுறை கூறிவிட்டோம்.

நாங்கள் இந்த இடத்தை அடையும் வரை வடகொரியா மீது பொருளாதாரத் தடைகள் தொடரும்” என்றார்.

இம்மாத தொடக்கத்தில் வடகொரியா  இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்தது.

வடகொரியாவின் செயலால் யாரும் மகிழ்ச்சியடையவில்லை. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார்.

முன்னதாக, வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

தொடர்ந்து ஏவுகணை  சோதனையில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே முரண்பாடு அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close