[X] Close

என் இதயம் உடைந்துவிட்டது: ஐப்பான் பிரதமர் அபே


  • kamadenu
  • Posted: 29 May, 2019 15:33 pm
  • அ+ அ-

என் இதயம் உடைந்துவிட்டது என்று  ஜப்பானில் பள்ளி மாணவர்கள்  தாக்குதலுக்குள்ளாகி இருவர் பலியான  சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 13 கிலோ மீட்டருக்கு அப்பால்  கவசாகி  நகரில் செவ்வாய்க்கிழமை ரியுச்சி இவாசாகி என்ற  நபர் பள்ளிக் கூட சிறுமிகள் மீது கத்தியால் குத்தி  தாக்குதல் நடத்தினார்.

இதில் 11 வயது சிறுமி உட்பட இருவர் பலியாகினர். 17 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நபர் தன்னை தானே கத்தியால் குத்தி இறந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பான் மக்களை அதிர்ச்சி அடைய செய்த இந்த சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தாக்குதல் குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே கூறும்போது,

”இது மிகவும் வலியை தரக் கூடிய சம்பவம். என் இதயம் உடைந்துவிட்டது. இந்தத் தாக்குதலில் பலியான குழந்தைகளுக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

மேலும் குழந்தைகளின் பாதுகப்பை உறுதிசெய்யுமாறு தனது அமைச்சர்களை அபே அறிவுறுத்தி இருக்கிறார்.

தாக்குதல் நடந்த இடத்தில் பலியானவர்களின் நினைவாக ஜப்பான் மக்கள் சாலையில் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close