[X] Close

‘‘இந்தியாவை ஒருங்கிணைத்த தலைவர் மோடி’’ - தேர்தலுக்கு முன் விமர்சித்த ‘டைம்’ இதழ இந்தமுறை சரமாரி பாராட்டு


  • kamadenu
  • Posted: 29 May, 2019 15:20 pm
  • அ+ அ-

-Janarthanaperumal S_50242

தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடியை ‘பிளவுவாத தலைவர்’ என கடுமையாக விமர்சித்த அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிக்கை தேர்தலுக்கு பிறகு அவரை வெகுவாக பாராட்டி கட்டுரை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான டைம்,  தனது மே20, 2019 இதழில் ''இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்'' என்ற கட்டுரையை வெளியிட்டுள்ளது. இந்த இதழ் அட்டையில் 68 வயதான மோடியின் உருவப்படம் ஓவியமாகத் தீட்டப்பட்டது.

''2014ல் அவர் (மோடி) ஊழல் மற்றும் சுரண்டல்களில் தவிக்கும் மக்களின் மீட்பராக தன்னை முன்னிறுத்தி வளர்ச்சியை நோக்கி நாட்டை செலுத்தும் ஒரு நம்பிக்கையை உருவாக்கப் போவதாக பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆனால் 2019ல் பிரச்சாரம் முற்றிலும் வேறுமாதிரி திசைதிரும்பியுள்ளது.

இந்த கட்டுரையையில் ‘‘இந்து மத மறுமலர்ச்சியின் ஒரு பகுதியாக, வருங்காலத்தில் பிரகாசமான எதிர்காலத்தை அளிக்கப்போகும் ஒரு தூதுவராக அவர் இப்போது வலம் வரத் தொடங்கியுள்ளார். அதேவேளை, ஒரு அரசியல்வாதியாக மோடி ஏற்கெனவே சொன்ன வாக்குறுதிகளை காப்பாற்றத் தவறிவிட்டார். இதன்மூலம் மீண்டும் ஒரு தேர்தலில் போட்டியிடும் நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார்.

மோடியின் பொருளாதார அதிசயம் செயல்படுத்த முடியாமல் தோல்வியில் முடிந்தது மட்டுமில்லை, இந்தியாவில் நச்சுகலந்த ஒரு மதவாத தேசிய ஒரு மோசமான சூழ்நிலை உருவாகவும் அவர் உதவி புரிந்துள்ளார்’’ என விமர்சித்து இருந்தது.

'இந்தியாவை பிரித்தாளும் தலைவர் என்ற ' கட்டுரையை எழுதியவர் ஆதீஷ் டாசீர், இவர் இந்திய பத்திரிகையாளர் தல்வீண் சிங் மற்றும் காலஞ்சென்ற பாகிஸ்தானிய அரசியல்வாதியும் தொழிலதிபருமான சல்மான் டாசீரின் மகனுமாவார்.

இந்த கட்டுரையை பாஜக நிர்வாகிகள் பலரும் விமர்சித்து இருந்தனர். இந்தநிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. தனியாக 303 இடங்களிலும் கூட்டணியுடன் இணைந்து 350க்கும் மேற்பட்ட இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் அதே டைம்ஸ் இதழில் தற்போதும் மோடி பற்றிய கட்டுரை ஒன்று வெளி வந்துள்ளது. அதில் மோடியை வெகுவாக புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த ஊடக நிறுவத்தைச் சேர்ந்த இந்தியரான மனோஜ் லட்வா எழுதியுள்ள கட்டுரையில் ‘‘வேறு எந்த இந்திய பிரதமரும் செய்யாத வகையில் நாட்டை ஒற்றுமை படுத்துவதில் பிரதமர் மோடி வெற்றி கண்டுள்ளார்.

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு பாகுபாடின்றி பிரதமர் மோடி மேற்கொண்ட செயல் திட்டங்கள் அவருக்கு இந்த தேர்தலில் வெற்றியை தேடி தந்துள்ளது. ஐந்தாண்டுகளில் இந்திய வாக்காளர்களை ஒருமுகப்படுத்தி மோடி இணைத்து விட்டார்.  இதன் மூலம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில்  இரண்டாவது முறை ஆட்சி பொறுப்பை மோடி ஏற்கிறார்.

இன்னும் அவர் பல பணிகளை செய்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சில ஊழல் அதிகாரிகளால் கடந்த ஆட்சிக்காலத்தில் அவர் பல இன்னல்களை சந்தித்தார். அரசு நிறுவனங்களில் மாற்றங்களை கொண்டு வருவதில் இவர்கள் தடை கற்களாக இருந்தனர். இதனை முடிவுக்கு கொண்டு வரும் சீர்த்திருத்தத்தை பிரதமர் மோடி இரண்டாவது ஆட்சிக்காலத்தில் செய்ய வேண்டிய தேவை உள்ளது.

பிரதமர் மோடி ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட சாதனைகள் தொடரும் என நம்பலாம். அவரது பல சாதனைகளை உலக வங்கி, சர்வதேச நிதியம், ஐ.நா என பல தரப்பும் அங்கீகரித்து பாராட்டியுள்ளது. சில மோதல்கள் சம்பவத்தின்போது பிரதமர் மோடி அமைதியாக இருந்தது அவர் மீது விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஆனால் வாக்காளர்கள் வாக்குச்சீட்டுகளில் தங்கள் ஆதரவை அவருக்கு தெரிவித்து விட்டனர்’’ என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close