[X] Close

மாஸ்கோவில் ஆப்கான் பிரதிநிதிகள் - ஆப்கான் தலைவர்கள் அமைதி பேச்சுவார்த்தை


  • kamadenu
  • Posted: 29 May, 2019 13:30 pm
  • அ+ அ-

மாஸ்கோவில் அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக தலிபான் பிரதிநிதிகள் ஆப்கான் தலைவர்களை சந்தித்து பேசி உள்ளனர்.

18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில்  உள்நாட்டுப் போர் நடந்து வரும் வேளையில்,  வெளிநாட்டுப் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றினால் அமைதி பேச்சுவார்த்தை தயார் என்று தலிபான் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை ஆப்கான் தலைவர்களை வலியுறுத்தி உள்ளனர்.

ஆப்கான் தலைவர்களுடன் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையை தலிபான்களின் பிரதிநிதிகளின் தலைவர் முல்லா பராதர் அக்ஹுத் தலைமையேற்றிருந்தார்.

இந்த பேச்சுவார்த்தை குறித்து முல்லா கூறும்போது, “ஆப்கானிஸ்தான் அமைதியை விரும்புகிறது ஆனால் முதலில் அதற்காக உள்ள தடைகளை நீக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் உள்ள ஆக்கிரபிம்பை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்” என்றார்.

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா தொடர்ந்து தலிபான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இதில் ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டுப் படைகள் வெளியேற வேண்டும். அதுவரை தலிபான்களுக்கு அமைதி ஒப்பந்தத்தில் உடன்பாடில்லை என்று செப்டம்பர் மாதம் தலிபான்கள் தரப்பில் கூறப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டு தலிபான்களுக்கு எதிராகச் சண்டையிட்டு வருகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close