[X] Close

பிரேசில் சிறை மோதலில் 15 பேர் பலி


15

  • kamadenu
  • Posted: 27 May, 2019 17:44 pm
  • அ+ அ-

பிரேசிலில் இரு குழுக்களுக்கிடையே சிறையில் நடந்த மோதலில் கைதிகள் 15 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''பிரேசில் தலைநகர் மானசிலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறையில் ஞாயிற்றுக்கிழமை இரு குழுக்களிடையே மோதல் நடந்தது. இதில் கைதிகள் 15 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த மோதல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்'' என்று செய்தி வெளியானது.

கடந்த 2017 ஆம் ஆண்டு சிறையில் நடந்த கலவரத்தில் 56 பேர் உயிரிழந்தனர். பிரேசிலைப் பொறுத்தவரை உலகிலேயே அதிகமான சிறைக்கைதிகளைக் கொண்ட மூன்றாவது நாடக உள்ளது.

2016-ம் ஆண்டு கணக்கின்படி அங்கு 7,26,712 பேர் சிறைக்கைதிகளாக உள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close