[X] Close

ஆஸ்திரேலிய அமைச்சரவையில் 7 பெண்கள்


7

  • kamadenu
  • Posted: 27 May, 2019 16:51 pm
  • அ+ அ-

ஆஸ்திரேலியாவில் புதிதாகப் பதவியேற்க உள்ள அமைச்சரவையில் 7 பெண்கள் இடம்பெற உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் 151 தொகுதிகளுக்கு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் சுதந்திரா கூட்டணிக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை எல்லாம் உடைத்து மீண்டும் ஆஸ்திரேலியப் பிரதமராக ஸ்காட் மோரிசன் தேர்ந்தெடுக்கபபட்டார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தங்களது அமைச்சரவையின் புதிய அமைச்சர்கள் 22 பேரை அறிமுகப்படுத்தினார். இதில் ஏழு பேர் பெண்கள்.

இப்புதிய அமைச்சரவை வரும் புதன்கிழமை பதவியேற்க உள்ளது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  சுற்றுச் சூழல் அமைச்சராக சூசன் லே பதவியேற்க உள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close