[X] Close

ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் ட்ரம்ப் - மோடி அடுத்த மாதம் சந்திப்பு


20

  • kamadenu
  • Posted: 26 May, 2019 07:36 am
  • அ+ அ-

ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி-20 நாடுகள் உச்சி மாநாட்டின் நடுவே அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 23-ம் தேதி வெளியானது. இதில் ஆளும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். ட்விட்டரிலும் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு மோடி நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜப்பானின் ஒசாகா நகரில், ஜி-20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு வரும் ஜூன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டுக்கு நடுவே, ட்ரம்பும் மோடியும் தனியாக சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர். அப்போது இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

இதுகுறித்து, அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜப்பானில் நடை பெறும் ஜி-20 நாடுகள் மாநாட்டின் இடையே அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் இடையே முத் தரப்பு பேச்சுவார்த்தை நடைபெ றும். இதில் இந்திய - பசிபிக் பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும். இதையடுத்து, ட்ரம்பும் மோடியும் தனியாக சந்தித்துப் பேச உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close