[X] Close

மோடி பதவியேற்பு விழாவில் அதிபர் சிறிசேனா பங்கேற்பு


  • kamadenu
  • Posted: 26 May, 2019 07:37 am
  • அ+ அ-

டெல்லியில் நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பங்கேற்கவுள்ளார்.

இது தொடர்பாக அதிபர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது, “பிரதமர் மோடியுடன் அதிபர் சிறிசேனா வெள்ளிக்கிழமை பேசினார். மோடியின் பதவியேற்பு விழாவில் சிறிசேனா பங்கேற்பது உறுதி” என்றார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றியை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு சிறிசேனா வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியுடன் அவர் தொலைபேசியில் பேசினார். இது குறித்து சிறிசேனா தனது ட்விட்டர் பதிவில், “பிரதமர் மோடிக்கு சற்று முன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் பதவிக்கு மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதை இந்தியாவுடன் இலங்கையும் கொண்டாடுகிறது, இந்தியா – இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் என எண்ணங்களை பகிர்ந்து கொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014-ல் பிரதமராக மோடி பதவியேற்ற விழாவில், பிராந்தியத் தலைவர்களுடன் அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்றார்.

கடந்த வியாழக்கிழமை மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இலங்கை அரசில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதில் இணைந்து பணியாற்றிட விருப்பம் தெரிவித்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close