[X] Close

மக்களவைத் தேர்தல் முன்னிலை: பிரதமர் மோடிக்கு ரணில் வாழ்த்து


  • kamadenu
  • Posted: 23 May, 2019 13:32 pm
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று வரும் நிலையில், பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை நடந்தது. 542  தொகுதிகளில் 273 இடங்களில் பாஜகவும் காங்கிரஸும் நேருக்கு நேர் போட்டியிட்டன.  7,928 வேட்பாளர்கள் நாடு முழுவதும் போட்டியிட்டனர். இதில்  724 பெண்கள் போட்டியிட்டனர்.

பாஜக 437 வேட்பாளர்களையும், காங்கிரஸ் கட்சி 421 வேட்பாளர்களையும்  களமிறக்கியது. இந்திய வரலாற்றிலேயே காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் அதிகமாக வேட்பாளர்களை பாஜக நிறுத்தியது.

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து மீண்டும் 2-வது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங் வாழ்த்த தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரணில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ‘‘நீங்கள் பெறவுள்ள மிகப்பெரிய வெற்றிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக கொள்கிறேன். தொடர்ந்து உங்களுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்ற இலங்கை விரும்புகிறது’’ எனக் கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close