[X] Close

396 பேரின் கல்விக் கடனை நான் ஏற்றுக்கொள்கிறேன்: பட்டமளிப்பு விழாவில் இன்ப அதிர்ச்சி கொடுத்த தொழிலதிபர்


396

  • kamadenu
  • Posted: 22 May, 2019 15:44 pm
  • அ+ அ-

அமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவின்போது, 396 மாணவர்களின் கல்விக் கடனை நானே செலுத்துகிறேன் என்று தெரிவித்து தொழிலதிபர் ஒருவர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ராபர்ட் எஃப் ஸ்மித்  என்ற அமெரிக்க கோடீஸ்வரர் பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருபவர். அமெரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க கருப்பு அமெரிக்கர்களில் செல்வாக்குமிக்க தொழிலதிபர்களில் முன்னிலையில் இருப்பவர் ஸ்மித்.

56 வயதான ஸ்மித், மோர் ஹவுஸ் ஆடவர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவுக்கு சமீபத்தில் சென்றார். அங்கு உரையாற்றிய ஸ்மித், ''எங்கள் குடும்பம்  8 தலைமுறைகளாக இங்கு வசித்து வருகிறது. எனவே இங்குள்ள 396 மாணவர்களின் கல்விக் கடனை நான் ஏற்றுக்கொள்கிறேன்'' என்றார்.

ஸ்மித் இதனைக் கூறியதும் பட்டமளிப்பு விழாவில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் கரகோஷம் எழுப்பி நன்றி தெரிவித்தனர்.

396 மாணவர்களுக்கு அவர் கல்விக் கடனைச் செலுத்துவார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

dcxs.jpg 

இது தொடர்பாக கல்லூரி மாணவர் ஒருவர் கூறும்போது, ''எங்களால் முதலில் அதை நம்ப முடியவில்லை. அவர் உண்மையாகத்தான் கூறுகிறாரா என்று நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். இது மிகப்பெரிய தொகை'' என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close