[X] Close

எவரெஸ்டில் 24-வது முறையாக ஏறி நேபாள வீரர் உலக சாதனை


24

  • kamadenu
  • Posted: 22 May, 2019 07:36 am
  • அ+ அ-

நேபாளத்தின் ஷெர்பா பழங்குடியின மக்கள், மலையேறும் வீரர்களுக்கு வழிகாட்டியாக பணியாற்றுகின்றனர். அந்த நாட்டின் கும்பு பள்ளத்தாக்கு, சோளுகும்பு மாவட்டம், தாமே கிராமத்தைச் சேர்ந்த கமி ரிதா ஷெர்பா, 'செவன் சமிட் டிரக்ஸ்' நிறுவனத்தில் மலையேற்ற வழிகாட்டியாக பணியாற்றி வருகிறார்.

நேபாளத்தைச் சேர்ந்த அபா ஷெர்பா, புர்பா தாஸி ஷெர்பா ஆகியோர் எவரெஸ்டில் 21 முறை ஏறியது உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை கடந்த 2017-ம் ஆண்டில் கமி ரிதா ஷெர்பாவும் எட்டினார். கடந்த 2018-ம் ஆண்டில் 22-வது முறையாக எவரெஸ்டில் ஏறி புதிய உலக சாதனை படைத்தார். இதைத் தொடர்ந்து அண்மையில் 23-வது முறையாக எவரெஸ்டில் கால் பதித்து தனது சாதனையை தானே முறியடித்தார்.

இதன்பிறகு இந்திய போலீஸ் மலையேற்ற குழுவினருக்கு வழிகாட்டியாக சென்ற கமி ரிதா ஷெர்பா நேற்று 24-வது முறையாக எவரெஸ்டில் ஏறி மீண்டும் புதிய உலக சாதனை படைத்தார்.

கடந்த 1994-ம் ஆண்டில் தன்னுடைய 24-வது வயதில் முதல் முறையாக எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய கமி ரிதா ஷெர்பா, தன்னுடைய 49-வது வயதில் 24-வது முறையாக 8,848 மீட்டர் உயர எவரெஸ்டில் ஏறி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close