[X] Close

ஆப்கனில் பாதுகாப்புப் படை தாக்குதல்: ஐஎஸ் தீவிரவாதிகள் 4 பேர் பலி


4

  • kamadenu
  • Posted: 21 May, 2019 18:04 pm
  • அ+ அ-

ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில்  ஐஎஸ் தீவிரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், ''ஆப்கானிஸ்தானில் நன்கர்ஹர் மாகாணத்தில் சாபர்கர் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தேசிய பாதுகாப்புப் படை தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்'' என்று செய்தி வெளியானது.

ஆப்கன் அரசு நடத்திய இந்தத் தாக்குதல் தொடர்பாக ஐஎஸ் இதுவரை எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை.

நன்கர்ஹர் மாகாணம் ஆப்கன் தலைநகர் காபூலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இம்மாகாணத்தில் தொடர்ந்து ஐஎஸ் தீவிரவாதிகளும் ஆப்கன் பாதுகாப்புப் படையும் சண்டையிட்டு வருவதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்தனர்.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்கள் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கக் கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close