[X] Close

முற்றும் இரான் - அமெரிக்கா மோதல்


  • kamadenu
  • Posted: 21 May, 2019 12:36 pm
  • அ+ அ-

ஈரானை பற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சமீபத்திய கருத்து காரணமாக அந்நாட்டு அதிகாரிகளால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறார்.

ஒருவேளை ஈரான் சண்டை வேண்டும் என்றால், அதுவே ஈரானுக்கு இறுதியாக இருக்கும். மீண்டும் அமெரிக்காவை அச்சுறுத்த வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அந்நாட்டை எச்சரித்து இருந்தார்.

இந்த நிலையில் ட்ரம்பின் இந்தக் கருத்தை ஈரான் அதிகாரிகள் விமர்சித்துள்ளனர்.

இதுகுறித்து  ஈரான்  நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகார இயக்குனர் அமிர் கூறும்போது, ட்ரம்ப் ஒரு பைத்தியகத்தனமான அதிபர் அவரது நிர்வாகம் குழப்பமானது. வெள்ளை மாளிகையில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. ட்ரம்ப் ஈரானின் தலையில் துப்பாக்கி வைத்திருப்பதாக நினைத்து கொண்டிருக்கிறார். ஆனால் அது அவரது கற்பனை ” என்றார்.

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சரும் ட்ரம்ப்பின் கருத்தை விமர்சத்திருக்கிறார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து வந்த ட்ரம்ப்  ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து  அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இந்த நிலையில் அணுஆயுத ஒப்பந்தத்தில் பிற நாடுகளின் ஆதரவுடன் ஈரான் தொடர்ந்து வருகிறது.

இதில் விதிமுறைகளை பின்பற்ற முடியாது என்று சமீபத்தில் கூறியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் மோதல் அதிகமாகி உள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close