[X] Close

எரிவாயு, எண்ணெய் இல்லை: திட்டத்தின் எதிர்பாரா தோல்வியினால் பாக். நம்பிக்கைக்குப் பின்னடைவு


  • kamadenu
  • Posted: 20 May, 2019 19:19 pm
  • அ+ அ-

பாகிஸ்தான் தனது பொருளாதார தடுமாற்றங்களைச் சீர்த்திருத்த பலவகைகளிலும் போராடி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டுக்குப் புதிய பின்னடைவாக கச்சா எண்ணெய், எரிவாயு எடுக்கும் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

 

கராச்சி நகரின் அரபிக்கடல் பகுதியில் எரிவாயு, கச்சா எண்ணெய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கிணறு தோண்டும் நடவடிக்கையில் அந்நாடு ஈடுபட்டிருந்தது. ஆனால் அவர்கள் இத்தனை காலம் முயன்று பார்த்ததில் எதிர்பார்த்ததைப் போல் தோண்டிய இடத்தில் எரிவாயுவும் இல்லை, கச்சா எண்ணெய்க்கான வாய்ப்பும் இல்லை என்று தெரியவந்ததாக பாகிஸ்தான் பெட்ரோலிய அமைச்சக தெரிவித்துள்ளது.

 

தங்கள் தேவைக்கான எண்ணெய் அங்கு உள்ளது அதனை எடுக்கலாம் என்று தொடங்கிய திட்டம் தோல்வியடைந்தது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 

எக்சான் மொபில், இ.என்.ஃஇ. மற்றும் 2 பாகிஸ்தானிய நிருவனங்கள் சேர்ந்து ஜனவரியில் அங்கு எண்ணெய்க் கிணறு தோண்டு பணியில் ஈடுபட்டன.  ஆனால் அங்கு எதுவும் இல்லை என்பதால் திட்டம் கைவிடப்படுகிறது என்று பாகிஸ்தான் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

பாகிஸ்தானில் இயற்கை எரிவாயுவுக்கான பெரிய ரிசர்வாயர்கள் உள்ள நாடுதான் பாகிஸ்தான். ஆனால் பெரிய எண்ணெய் வயல்களை அந்த நாடு இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. இதனால்தான் அரபிக்கடலில் கச்சா எடுக்கும் முயற்சிகள் பல தோல்வியில் முடிந்தன.

 

பெரும்பாலான பாகிஸ்தானின் பெட்ரோலியத் தேவைகளை மத்திய கிழக்கு நாடுகள்தான் பூர்த்தி செய்கின்றன.  இந்நிலையில் இன்னொரு முயற்சி தோல்வியடைந்திருப்பது அங்கு கடும் அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close