[X] Close

எகிப்தில் பாதுகாப்புப் படை துப்பாக்கிச் சூடு: 12 தீவிரவாதிகள் பலி


12

  • kamadenu
  • Posted: 20 May, 2019 18:00 pm
  • அ+ அ-

எகிப்தில் ஞயிற்றுக்கிழமை  சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து  பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் சந்தேகத்துக்குரிய 12 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லபட்டுள்ளனர்.

இதுகுறித்து எகிப்து உள்துறை அமைச்சகம் தரப்பில்,”எகிப்தில் ஞாயிற்றுக்கிழமை  சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் சந்தேகத்துக்கு இடமான தீவிரவாதிகள் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட சந்தேக தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதலுடன் தொடர்புடையவர்களா என்று உறுதியாக தெரியவில்லை. தாக்குதல் நடந்த இடத்தில் ஆயுதங்களும், குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன” என்று தெரிவித்தனர்.

எகிப்தின் சினாய் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு அரசுப் படைகளுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close