[X] Close

ஈரானுக்கு ‘அதுவே’ இறுதியாக இருக்கும்: ட்ரம்ப் எச்சரிக்கை


  • kamadenu
  • Posted: 20 May, 2019 17:02 pm
  • அ+ அ-

ஈரான் சண்டையை விரும்பினால் அதுவே அந்நாட்டுக்கு இறுதியாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில்,”

 ஒரு வேளை ஈரான் சண்டை வேண்டும் என்றால், அதுவே ஈரானுக்கு இறுதியாக இருக்கும். மீண்டும் அமெரிக்காவை அச்சுறுத்த வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த வாரம் தங்களுடைய குறுகிய தொலைவு ஏவுகணைகள் கூட அரேபிய வளைகுடாவில் நிற்கும் அமெரிக்க போர் கப்பலை எளிதாக தாக்கும் என்று ஈரான் அமெரிக்காவை எச்சரித்து இருந்தது.

இதற்கு தற்போது ட்ரம்ப் பதிலளித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து வந்த ட்ரம்ப்  ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து  அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இந்த நிலையில் அணுஆயுத ஒப்பந்தத்தில் பிற நாடுகளின் ஆதரவுடன் ஈரான் தொடர்ந்து வருகிறது.

இதில் விதிமுறைகளை பின்பற்ற முடியாது என்று சமீபத்தில் கூறியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் மோதல் அதிகமாகி உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகளையும், போர்க் கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்தது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்திருப்பதால் ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close