[X] Close

ஃபேஸ்புக்குக்கு ஒரு மாதம் தடை போட்ட அரசு


facebook-to-be-banned-in-papua-new-guinea-for-a-month

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 May, 2018 12:21 pm
  • அ+ அ-

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் சேவைக்கு பப்புவா நியூ கினி நாடு ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு தொலைதொடர்பு அமைச்சர் சாம் பேஸில் கூறும்போது, "பப்புவா நியூ கினியில் 10% மக்கள் மட்டுமே இணையத்தை பயன்படுத்துகின்றனர்.

ஆனாலும் அரசு இணையப் பயன்பாட்டை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அந்த வகையில்தான், ஃபேஸ்புக் சேவையை ஒரு மாதம் முடக்குகிறோம். நாட்டின் சைபர் சட்டத்தை ஃபேஸ்புக் எந்த வகையில் எல்லாம் மீறுகிறது என்பதைக் கண்காணிக்கவிருக்கிறோம்.

ஃபேஸ்புக் சேவைக்கு ஒரு மாத காலம் தடை விதிப்பதன் மூலம் போலிக் கணக்குகள் வாயிலாக ஆபாசப் பதிவுகளை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்பவர்களையும், தவறான தகவல்களைப் பகிர்பவர்களையும் கண்டறியப்போகிறோம்.
சர்வதேச அளவில் போலி செய்திகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சில வேளைகளில் உணர்வுகளைத் தூண்டும் விதமான செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், எந்த ஒரு சமூகவலைதளமும் அவை குறித்து மக்களை எச்சரிக்கத் தயாராக இல்லை.

பப்புவா நியூ கினியா மக்களுக்காகவே பிரத்யேக சமூக வலைதள சேவை ஒன்றைத் தொடங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம். தேவைப்பட்டால் உள்ளூர் அப்ளிகேஷன் டெவலப்பர்களைப் பயன்படுத்தி நாட்டு மக்களுக்கு ஏற்ற சமூக வலைதளம் ஒன்று உருவாக்கப்படும்" என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close