[X] Close

ஆஸ்திரேலியா பொதுத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது


  • kamadenu
  • Posted: 18 May, 2019 16:39 pm
  • அ+ அ-

ஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை வேகமாக நடந்து வருகிறது. இந்தத் பொதுத்தேர்தலில்  சுதந்திரா கட்சி சார்பாக பிரதமர் ஸ்காட் மோரிசன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தொழிற்கட்சி சார்பாக பில் ஷார்டன் போட்டியிடுகிறார்.

இரு கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. முதல் கட்ட வாக்கு எண்ணிகையில் தொழிற்கட்சி முன்னிலை வகித்த நிலையில் தற்போது சுதந்திரா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 151 இடங்களில் தொழிற்கட்சி 40 இடங்களிலும், சுந்தந்திரா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 43  இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ஆட்சி அமைக்க 70 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும்'' என்று செய்தி வெளியானது.

தேர்தல் முடிவுகள் இன்று இரவுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close