[X] Close

துபாயில் விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி


  • kamadenu
  • Posted: 17 May, 2019 12:22 pm
  • அ+ அ-

-பிடிஐ

துபாயில் சிறியரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி மற்றும் இணை விமானி இருவரும் கொல்லப்பட்டனர்.

நேற்று மாலை 7.30 மணியிலிருந்து 8 மணிக்குள்ளாக இவ்விபத்து நடந்துள்ளது. நான்கு பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற விமானம் திடீரென ஏற்பட்ட விபத்தின் காரணமாக தரையில் நொறுங்கி விழுந்ததாகவும் விமானத்தை ஓட்டிச்சென்ற பைலட் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் ஐக்கிய அரபு எமிரேட் அரசு ஊடகங்கள் தெரிவிரிக்கின்றன.

இவ்விமானம் எங்கிருந்து புறப்பட்டது எங்கு விபத்துக்குள்ளானது போன்ற தகவல்களை வெளியிடப்படவில்லை.

சிறிய டயமண்ட் விமானம் எனப்படும் இவ்வகை விமானத்தை அமெரிக்காவின் மாபெரும் ஹனிவெல் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இவ்விமானம் விபத்துக்குள்ளானத்திற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணம் என்று கூறப்படுகிறது.

துபாய் விமான நிலையத்தில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் சிறிது தாமதத்திற்கு பின் இயங்கும் என்றும் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில விமானங்கள் திருப்பப்படுகின்றன என்றும் விமான நிலைய உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

துபாய் சர்வதேச விமான நிலையம் உலகின் மிகவும் பரபரப்பான விமானப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாகும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close