[X] Close
 

ட்ரம்ப் எழுதிய கடிதத்தில் இலக்கணப் பிழை: திருத்தித் திருப்பி அனுப்பிய ஆசிரியை


retired-english-teacher-corrects-error-strewn-letter-from-donald-trump

  • பாரதி ஆனந்த்
  • Posted: 29 May, 2018 10:08 am
  • அ+ அ-

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எழுதிய கடிதத்தில் இலக்கணப் பிழைகள் இருப்பதாகக் கூறி அந்தக் கடிதத்தில் திருத்தம் செய்து அதை வெள்ளை மாளிகைக்கே திருப்பி அனுப்பிவைத்துள்ளார் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர்.

அமெரிக்காவின் அட்லான்டா மாகாணத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை யோன் மேசன். அவர் ஹியூக்ஸ் நடுநிலைப் பள்லியிலும் மால்டின் மேல்நிலைப் பள்ளியிலும் 17 ஆண்டுகள் ஆங்கிலப் பாடம் பயிற்றுவித்தார். தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்டார்.

இந்நிலையில், அண்மையில் புளோரிடா மாகாணத்தில் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தாரை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் எனக் கோரி ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தில் ஏகப்பட்ட இலக்கணப் பிழை இருந்ததாகக் கூறுகிறார் மேசன். அந்தக் கடிதத்தில் இருந்த இலக்கணப் பிழைகளையும், தவறான வார்த்தைப் பிரயோகத்தையும் சரி செய்த ஆசிரியை மேசன் திருத்தப்பட்ட பிரதியை தனது முகநூல் பக்கத்திலும் பகிர்ந்தார். அதில், "அதிபர் ட்ரம்பிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதை விரைவில் வெள்ளை மாளிகைக்கு திருப்பி அனுப்பிவைப்பேன்" எனக் கூறியிருந்தார். அந்தக் கடிதம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

அதேவேளையில், இதுபோன்ற கடிதங்களை பெரும்பாலும் அதிபரே கைப்பட எழுத வாய்ப்பில்லை. வெள்ளை மாளிகை அதிகாரிகள் யாரேனும் எழுதியிருக்கலாம் இருந்தாலும் இதே பிழைகளுடன் இப்படி ஒரு கடிதத்தை நடுநிலைப் பள்ளி மாணவர் யாரேனும் எழுதியிருந்தால் அவருக்கு சி அல்லது சி பிளஸ் மதிப்பெண்ணே வழங்கியிருப்பேன் என்று மேசன் குறிப்பிட்டுள்ளார். நான்.. எனது என்ற வார்த்தைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ள அந்தக் கடிதத்தின் நடை மிரளச் செய்யும் வகையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close