[X] Close

40 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை எதிர்கொள்ளும் வடகொரியா


40

  • kamadenu
  • Posted: 16 May, 2019 17:51 pm
  • அ+ அ-

வடகொரியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவி வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வடகொரியா அதிகாரிகள் தரப்பில், ''1982க்குப் பிறகு வடகொரியா குறைந்த அளவு மழைப்பொழிவைச் சந்தித்துள்ளது. பருவ சூழலாலும் சர்வதேசப் பொருளாதாரத் தடைகளாலும் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1 கோடி வடகொரிய மக்கள் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றனர் என்று ஐ.நா. சபை சமீபத்தில் கூறியது. இதனைத் தொடர்ந்து வடகொரியா தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவில் இந்த வறட்சி மே மாதம் முடியும் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close