[X] Close

சீனாவில் கட்டிடம் சரிந்து விபத்து: 5 பேர் பலி


5

  • kamadenu
  • Posted: 16 May, 2019 16:49 pm
  • அ+ அ-

சீனாவில் ஷாங்காய் நகரில் கட்டிடம் சரிந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். இதுவரை 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சீன  ஊடகங்கள் தரப்பில், ''சீனாவின் ஷாங்காய் நகரில் மறுசீரமைப்பு செய்யப்பட்டிருந்தபோது வியாழக்கிழமை சரிந்ததில் 5 பேர் பலியாகினர். மீட்புப் பணி வீரர்கள் விரைவாகச் செயல்பட்டதால் 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.

கட்டிட விபத்தினால் கட்டிடத்தின் பல பகுதிகள் சிதறிக் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கட்டிடம்  சரிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த விபத்து குறித்து ஷாங்காய் அரசுத் தரப்பில் இதுவரை ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close