[X] Close
 

மானசரோவர் ஏரியில் பக்தர்கள் புனித நீராட சீனா தடை?


china-stopping-devotees-from-taking-dip-in-mansarovar-lake-says-a-priest

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 May, 2018 17:54 pm
  • அ+ அ-

திபெத்தில் உள்ள மானசரோவர் ஏரியில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு சீனா தடை விதிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்தியாவில் இருந்து மானசரோவர் சென்ற சமய குருமார்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சீவ் தாக்கூர் என்றவர் ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் இந்தியாவில் இருந்து செல்லும் பக்தகர்களுக்கு மானசரோவர் ஏரியில் புனித நீராடத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

சீன அதிகாரிகளின் உத்தரவின் பேரிலேயே தாங்கள் தடுத்து நிறுத்தப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். "எங்களுக்கு புனித நீராட அனுமதியில்லை என்றால் எதற்காக விசா வழங்கப்பட்டது. எங்களை அனுமதிக்காவிட்டால் என் தலைமையில் வந்துள்ள 80 குருமார்களும் இந்த இடத்தைவிட்டு நகர்வதாக இல்லை" எனக் குமுறியிருக்கிறார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சுஷ்மா, மோடி ஆட்சியில் தனது 4 ஆண்டுகால பயணத்தை முடித்த சுஷ்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் மானசரோவர் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சுஷ்மா, "இது உண்மைக்குப் புறம்பானது. மானசரோவர் ஏரியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படுகிறது. அதைவிடுத்து எங்கு வேண்டுமானாலும் புனித நீராடலாம் என்ற நிலை இல்லை. எனவே, இந்தக் குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல" என்றார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close