[X] Close

சுருங்கும் சந்திர மண்டலம்; ஏற்படும் பூகம்பங்கள்: நாஸா தகவல்


  • kamadenu
  • Posted: 14 May, 2019 17:26 pm
  • அ+ அ-

-பிடிஐ

சந்திரனின் உட்பகுதி சீராகக் குளிரடைந்து வருவதால் சந்திர மண்டலத்தில் பூகம்பங்கள் ஏற்படுவதோடு சந்திரனின் மேற்புறத்தில் சுருக்கங்கள் விழுந்து வருவதாக நாஸா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த பல மில்லியன் ஆண்டுகளாக குளிரடையும் நடைமுறையினால் 50 மீட்டர்கள் வரை சந்திர மண்டலம் சுருங்கி வருகிறது.  நெகிழ்வுத் தன்மை கொண்டதல்ல சந்திரனின் மேற்புறம் என்பதால் அது சுருங்கும்போது உடைகிறது. இதனால் ஒன்றையொன்று மோதும் ஃபால்ட்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு பகுதி இன்னொரு பகுதியுடன் மோதுகிறது.

“எங்கள் ஆய்வுகளின் படி இந்த பாறைமுறிவுகள் இன்னமும் செயல்நிலையில் உள்ளதால் இன்னும் சிலபல பூகம்பங்கள் அங்கு ஏற்படும்.  நிலவும் தொடர்ந்து குளிரடைந்து வருவதால் சுருங்கி, அதன் மேற்புறத்தில் சுருக்கங்கள் தோன்றியுள்ளன” என்று அமெரிக்க மூத்த விஞ்ஞானி தாமஸ் வாட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

“இந்த பூகம்பங்கள் ஓரளவுக்கு வலுவாகவே உள்ளன, ரிக்டர் அளவுகோலில் 5 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கின்றன” என்கிறார் அவர் மேலும்.

சந்திர மண்டலத்தின் மேற்புறத்தில் இந்த முறிவுப்பாறைகள் சிறு மாடிப்படி அமைப்பு கொண்ட மலைகளாக, சிலபத்தடி மீட்டர்கள் உயரம் கொண்டவையாக, பல கிமீட்டர்கள் பரவியுள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக சந்திரமண்டலத்தின் உட்பகுதிகள் உஷ்ணமடைவதால் அங்கு பூகம்பங்கள் தோன்றுவதாகக் கருதப்பட்டது, ஆனால் தற்போது சந்திர மண்டலம் குளிரடைந்து வருவதால் சுருக்கங்கள் தோன்றுவதாகவும் பூகம்பங்கள் ஏற்படுவதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த ஆய்வுகள் நேச்சர் இதழில் வெளிவந்துள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close