[X] Close

அலாஸ்காவில் விமான விபத்து: 4 பேர் பலி


4

  • kamadenu
  • Posted: 14 May, 2019 17:01 pm
  • அ+ அ-

அலஸ்காவில் இரு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பலியாகினர்.

இதுகுறித்து அமெரிக்க கடற்துறை தரப்பில், ''அமெரிக்க மாகாணமான அலாஸ்காவின் தென்கிழக்குப் பகுதியில் இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். 

இதில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மாயமான சிலரைத் தேடும் பணி நடந்து வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது'' என்று தெரிவிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான விமானம் ராயல் பிரின்சஸ் எனும் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இது கடல் பகுதிகளில் பயன்படுத்துவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கு ராயல் பிரின்சஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. கெட்சிகனில் அமைந்துள்ள சுற்றுலா விடுதிக்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close