[X] Close

அமைதியாக இருங்கள்: சங்ககாரா வேதனை


  • kamadenu
  • Posted: 14 May, 2019 15:25 pm
  • அ+ அ-

இனவாதத்தாலும், வன்முறையாலும் ஒருவேளை நம்மை அழித்துக்கொண்டால் நாம் நாட்டை இழந்துவிடுவோம் என்று இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்ககாரா வேதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வடமேற்கு மாநிலங்களில் உள்ள 4 மாவட்டங்களில் முஸ்லிம் மதத்தினர் வைத்திருந்த கடைகளையும், மசூதியையும் ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியைத் தொடர்ந்து பெரும் வன்முறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு 4 மாவட்டங்களுக்கு மட்டும் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நேற்று மாலை இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அங்கு சமூக ஊடகங்களும் முடக்கப்பட்டுள்ளன.

இந்தக் கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்தக் கலவரம் குறித்து இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்ககாரா தனது ட்விட்டர் பக்கத்தில், ''நிறுத்துங்கள்... சுவாசியுங்கள், யோசியுங்கள். உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள். இனவாதத்தாலும், வன்முறையாலும் ஒருவேளை நம்மை அழித்துக்கொண்டால் நாம் நாட்டை இழந்து விடுவோம். இலங்கை மக்களாக ஒன்றிணையுங்கள். அமைதியாக இருங்கள். ஒருவரை ஒருவர் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள். நாம் மீண்டும் ஒரே தேசமாக மீண்டும் எழுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close