[X] Close

இலங்கை ஒரு பன்முகச் சமூகம்: ஐ.நா.


  • kamadenu
  • Posted: 14 May, 2019 13:19 pm
  • அ+ அ-

இலங்கை என்பது பன்முகச் சமூகம். இங்கு இலங்கையினர் என்பது இந்து, புத்திஸ்ட், முஸ்லிம், கிறித்தவர்கள் என அனைவரும்தான் என்று அந்நாட்டு  அரசு வலியுறுத்த வேண்டும் என்று ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் வடக்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரு சமூகத்தினரிடையே கடும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இரவு நேரத்தில் 6 மணிநேர ஊடரங்கு உத்தரவை இலங்கை அரசு அறிவித்துள்ளது.

வடமேற்கு மாநிலங்களில் உள்ள 4 மாவட்டங்களில் முஸ்லிம் மதத்தினர் வைத்திருந்த கடைகளையும், மசூதியையும் ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியைத் தொடர்ந்து பெரும் வன்முறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு இந்த 4 மாவட்டங்களுக்கு மட்டும் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இன்று மாலை இலங்கை அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் இலங்கையினர் என்பது இந்து, புத்திஸ்ட், முஸ்லிம், கிறித்தவர்கள் என அனைவரும்தான் என்று இலங்கை அரசு வலியுறுத்த வேண்டும் என்று ஐ.நா. அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் கூட்டாக இணைந்து இலங்கையில் நடக்கும் வன்முறை குறித்து அறிக்கை விட்டுள்ளது

''இலங்கை ஒரு பன்முகச் சமூக அமைப்பைக் கொண்டது. ஒரு இலங்கை குடிமக்கள் என்பவர்கள் இந்துக்கள், புத்திஸ்ட்டுகள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் என அனைவரும்தான். இவர்கள் அனைவரும்  தங்கள் மதத்தைச் சுதந்திரமாகப் பின்பற்றி அமைதி மற்றும் பாதுகாப்பாக வாழ இந்த நாட்டின் அரசியலைப்பு அங்கீகரித்துள்ளது'' என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், இலங்கையில் நடக்கும் வன்முறை காரணமாக அங்கு சமூக வலைதளங்களும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close