[X] Close

ஏவுகணைகளை அழிக்க வேண்டும்: வடகொரியாவிடம் 70 நாடுகள் வலியுறுத்தல்


70

  • kamadenu
  • Posted: 12 May, 2019 09:05 am
  • அ+ அ-

வடகொரியா தன்னிடம் உள்ள அணு ஆயுதங்கள், ஏவுகணைகளை அழிக்க வேண்டும் என்று 70 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. அந்த நாட்டின் மீது போர் தொடுப்போம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் எழுந்தது.

இதில் திடீர் திருப்பமாக கடந்த 2018-ம் ஆண்டு தொடக்கத்தில் வடகொரியா அமைதி பேச்சுவார்த்தைக்கு முன் வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரலில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் சந்தித்துப் பேசினர். அதன்பின் கடந்த ஆண்டு ஜூனில் சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, வடகொரிய அதிபர் கிம் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த பிப்ரவரியில் இரு தலைவர்களும் வியட்நாமில் மீண்டும் சந்தித்துப் பேசினர். ஆனால் இரு தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

மீண்டும் போர்ப் பதற்றம்

இந்தப் பின்னணியில் கடந்த 4-ம் தேதி குறுகிய தொலைவு பாயும் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்தது. கடந்த 9-ம் தேதி அந்த நாடு மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதனால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது.

பதற்றத்தை தணிக்க வடகொரியா தன்னிடம் உள்ள அணு ஆயுதங்கள், ஏவுகணைகளை அழிக்க வேண்டும் என்று 70 நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக பிரான்ஸ் தயார் செய்துள்ள வரைவு ஆவணத்தில் அமெரிக்கா, தென்கொரியா உட்பட 70 நாடுகளின் அரசு பிரதிநிதிகள் கையெழுத்திட்டு வடகொரியாவிடம் சமர்ப்பித்துள்ளனர். எனினும் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்த வரைவு ஆவணத்தில் கையெழுத்திடவில்லை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close