[X] Close

தீ விபத்தின்போது 30 நிமிடங்களில் 14 பேரை அதிரடியாக மீட்ட சீன இளைஞர்: வைரலாகும் வீடியோ


30-14

  • kamadenu
  • Posted: 11 May, 2019 15:39 pm
  • அ+ அ-

சீனாவில் தீ விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை தக்க நேரத்தில் கிரைன் மூலம் காப்பாற்றிய இளைஞர் பலரின் பாராட்டை பெற்றிருக்கிறார்.

சீனாவில் ஃபுஷன் நகரில் நகரில் உள்ள கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். லான் ஜுன்ஸ் என்ற 19 வயதான இளைஞர்.

கட்டுமானப் பணி நடைபெறும் பகுதிக்கு அருகிலுள்ள கட்டிடம்  ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில்  மேல் மாடியில் பலர்சிக்கியுள்ளதை அறிந்த லான் கிரேனை இயக்கி 14 பேரை அந்த தீ விபத்திலிருந்து காப்பாற்றியுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து லான் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசும்போது, “அந்த நேத்தில் அங்கு சிக்கிக் கொண்டவர்களை எப்படி மீட்க வேண்டும் என்று மட்டுமே சிந்தித்தேன்” என்றார்.

தக்க நேரத்தில் புத்திசாலித்தனமாக சிந்தித்து 30 நிமிடங்களில் 14 பேரை மீட்ட லான்னை சூப்பர் ஹீரோ என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

கிரேனை செலுத்தி லான் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் வீடியோ சீன சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close