[X] Close

பிரெஞ்சு புரட்சிக்கு முந்தைய கல்வெட்டில் எழுதியிருப்பது என்ன?


  • kamadenu
  • Posted: 10 May, 2019 16:51 pm
  • அ+ அ-

-ஐஏஎன்எஸ்

பிரான்ஸ் நாட்டின் தொலைதூர கிராமம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் என்ன எழுதியிருக்கிறது என்பதை அறிய ஆர்வம் உருவானதால் அதை கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு 2 ஆயிரம் யூரோக்கள் அன்பளிப்பாக வழங்கப்படும என அறிவிக்கப்பட்டுள்ளது.

inscriptions.jpg 

பிரான்ஸ் நாட்டின் வடமேற்கின் கடலோர கிராமம் ஒன்றில் காணப்பட்ட கல்வெட்டு குறித்த விவரம் வருமாறு:

ப்ளோகேஸ்டெல், பிரிட்டானி கிராமத்தின் அருகே அலைகள் குறைவான கடல் பகுதிகளில் ஒரு மீட்டர் உயரமான பாறை ஒன்றில் இக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளதாக பிபிசி நேற்று வெளியிட்டிருந்த செய்தியில் தெரிவித்திருந்தது.

இக்கல்வெட்டில் உள்ள சில எழுத்துக்கள் சாதாரண பிரெஞ்சு எழுத்துக்களிலிருந்து மாறுபட்டுள்ளன. அல்லது தலைகீழாக உள்ளன. இதில் சில ஸ்காண்டிநேவிய-பாணி எழுத்துகளும் உள்ளன. பிரெஞ்சு புரட்சி நடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 1786 மற்றும் 1787 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்குள் இக்கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்று காலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டில் உள்ள எழுத்துக்களுடன் ஒரு கப்பல் மற்றும் சுக்கான் மற்றும் ஒரு சிலுவையை சார்ந்திருக்கும் ஒரு புனித இதயம் என சங்கேத குறியீடுகளும் கலந்துள்ளன.

inscriptions 002.jpg 

உள்ளூர் கல்வியாளர்கள் இக்கல்வெட்டு குறித்து எடுத்துரைத்த விளக்கங்கள் யாவையும் மீறி வேறு எதையோ இக்கல்வெட்டு சொல்லவிழைகிறது.

இது பழைய பிரிட்டன் அல்லது பஸ்க் மொழியிலானது என்கின்றனர் சிலர். இன்னும் சிலரோ, அரை கல்வியறிவு கொண்ட மனிதனால் செதுக்கப்பட்டுள்ளதுஎன்கின்றனர். இந்த எழுத்துக்கள் ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கு ஒலிக்குறிப்புகள் மூலம் கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூடிய செய்தியை கொண்டிருக்கலாம் என்கின்றனர் வேறு சிலர்.

இப்படி ஆளாளுக்கு வெவ்வேறு கருத்தை உதிர்த்ததால் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவிதத ப்ளோகேஷ்டல் கிராம நிர்வாகம் கடைசியாக இதை உலகத்தின் பார்வைக்கு கொண்டுசெல்வதென முடிவெடுத்தது.

இதுகுறித்து ப்ளோகேஷ்டல் கிராம மேயர் டாமினிக்கி காப் பேசியதை பிபிசி வெளியிட்டுள்ளது. அதில் அவர் தெரிவித்த விவரம் வருமாறு:

''நாங்கள் இவ்வட்டாரத்தில் உள்ள சரித்திர ஆய்வாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்களிடம் விசாரித்துவிட்டோம். ஆனால் இந்தப் பாறைக்குப் பின்னால் இருக்கும் கதை என்ன என்பதை யாராலும் கண்டுபிடித்துச் சொல்ல முடியவில்லை.

எனவே கல்வெட்டுக்கள் குறித்த நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் இதில் என்ன எழுதியிருக்கிறது என்பதைக் கண்டறிந்து சொல்லலாம். அவர்களுக்கு 2 ஆயிரம் யூரோக்கள் (இந்திய பணத்தில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம்) பரிசு தரவும் நாங்கள் சம்மதிக்கிறோம்.''

இவ்வாறு ப்ளோகேஷ்டல் கிராம மேயர் அறிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close