[X] Close

லண்டனில் இந்தியர் கத்தியால் குத்தி கொலை


  • kamadenu
  • Posted: 10 May, 2019 15:29 pm
  • அ+ அ-

ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்  லண்டனின் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், கூறப்படுவதாவது:

“ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் முகமத்  நதிமுதின் இவர் லண்டனில் உள்ள டெஸ்கோ சூப்பர் மார்க்கெட்டில் பணி செய்து வருகிறார். கடந்த ஐந்து வருடமாக லண்டனில் தங்கியிருக்கும் நிலையில் புதன்கிழமை முகமத் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகமதுவை ஆசியாவை சேர்ந்த ஒருவர்தான் கொலை செய்துள்ளதாக அவரது குடும்ப நண்பர் தெரிவித்திருக்கிறார்.

முகமத் நதிமுதினின் உடலைக் காண லண்டன் செல்ல அவரது குடும்பத்தினர் வெளியுறவுத் துறை சுஷ்மா ஸ்வராஜிடம் உதவி கேட்டுள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close