[X] Close

இங்கிலாந்து அரசக் குடும்ப வாரிசு பற்றி இன ரீதியாக கருத்து: பிபிசி தொகுப்பாளர் நீக்கம்


  • kamadenu
  • Posted: 10 May, 2019 12:53 pm
  • அ+ அ-

இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மெக்கன் மார்கல் தம்பதியின் குழந்தை குறித்து இன ரீதியாக கருத்து தெரிவித்த பிபிசி தொகுப்பாளர் நீக்கப்பட்டார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெக்கன் மார்கலை கடந்த மே மாதம் திருமணம் செய்துகொண்டார்.

இந்தத் தம்பதிக்கு  திங்கட்கிழமையன்று ஆண் குழந்தை பிறந்தது.தங்கள் குழந்தையை இளவரசர் ஹாரி - மெக்கல் ஆகிய இருவரும் இன்று (புதன்கிழமை) மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் இதனை குறிப்பிட்டு  பிபிசியின்  Radio 5 Live - வின் தொகுப்பாளர் டேனி பேக்கர் அரச குடும்பத்தின் குழந்தை மருத்துவமனையிலிருந்து வெளியேறியது என்பதை இரு தம்பதிகள் கையில் குரங்கை பிடித்துக் கொண்டு வரும் புகைப்படத்தை பதிவிட்டு குறிப்பிட்டிருந்தார்.

bfvd.jpg 

 

டேனியின் இந்தப் பதிவுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து  பிபிசி  நிறுவனம் அவரை பணியிலிருந்து நீக்கம் செய்தது.

எதிர்ப்புகள் வலுவாக எழ பதிவை நீக்கிய டேனி தனது கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று தனது செயலுக்கு மன்னிப்பு தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close