[X] Close

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை


  • kamadenu
  • Posted: 10 May, 2019 12:07 pm
  • அ+ அ-

ஜப்பானின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியது.

இதுகுறித்து ஜப்பான் புவியில் மையம் தரப்பில், “ ஜப்பானின் கிழக்கு கடற்கரைப் பகுதியான மியாசாகியில் காலை 8. 40 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலி 6. 3 ஆக பதிவாகியது. இதன் ஆழம் 24 கிலோ மீட்டர். இந்த நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து 9 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5. 1 ஆக பதிவாகியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

ஜப்பானில் 2011 ஆம் ஆண்டு ரிக்டர்அளவில் 9.0 ஆக ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 10,000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close