[X] Close

பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிப்பது கட்டாயம்: தேவாலய விதிகளில் போப் அதிரடி மாற்றம்


  • kamadenu
  • Posted: 10 May, 2019 07:12 am
  • அ+ அ-

கத்தோலிக்க தேவாலயங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடைபெறும்பட்சத்தில், அதுகுறித்து புகார் அளிக்க வேண்டியது கட்டாயம் என போப் ஆண்டவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இதற்கேற்ப கத்தோலிக்க தேவாலய விதிகளில் அவர் அதிரடி மாற்றம் செய்துள்ளார்.

கத்தோலிக்க தேவாலயங்களில் கன்னியாஸ்திரிகளும், மறைக்கல்வி பயில வரும் சிறார்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தற்போது பரவலாக நடைபெற்று வருகின்றன. எனினும், இதுதொடர்பாக புகார்அளிக்கவும், நடவடிக்கை மேற்கொள்ளவும் தேவையான விதிமுறைகள் தேவாலயங்களில் இதுவரை இல்லாமல் இருந்தது.

மேலும், இவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் நபர்கள், காவல்துறை அல்லது நீதிமன்றங்களை நாடிச் செல்வதும் மிகவும் குறைவான அளவிலேயே உள்ளது. இதனால், இச்சம்பவத்துக்கு காரணமான குற்றவாளிகள் பெரும்பாலும் சட்டத்தின் பிடிகளில் சிக்குவதில்லை.

மேலும், பல சமயங்களில் பேராயர்களே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதால், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதி கிடைப்பது அரிதாகிவிட்டது.

எனவே, பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிப்பதற்கும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலுவான விதிமுறைகளை வகுக்குமாறு கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை பீடமாக வாடிகனுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இதனை பரிசீலித்த போப் ஆண்டவர், தேவாலய விதிமுறைகளில் சில அதிரடி மாற்றங்களை செய்துள்ளார். இதுதொடர்பாக, உலகம் முழுவதும்உள்ள கத்தோலிக்க தேவாலயங்களுக்கு அவர் நேற்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:கத்தோலிக்க தேவாலயங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடைபெறும் பட்சத்தில், அதுகுறித்து அறிந்தவர்கள் சம்பந்தப்பட்ட தேவாலயத்தின் தலைமையிடம் புகார் அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

மேலும், இதற்காக ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் (டயோசீஸ்) இதுதொடர்பாக புகார் அளிப்பதற்காக பிரத்யேக அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இந்த அமைப்பினை உலகம் முழுவதும் உள்ள டயோசீஸ்கள் 2020-ம் ஆண்டுக்குள் கட்டாயமாக அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close