[X] Close

சிரியாவில் ஐஎஸ் ஆதிக்கப் பகுதியை மீட்ட அரசுப் படை


  • kamadenu
  • Posted: 09 May, 2019 16:54 pm
  • அ+ அ-

சிரியாவில் ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த ஆதிக்கம் நிறைந்த பகுதியை அரசுப் படைகள் மீட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிரிய போர் கண்காணைப்புக் குழு வியாழக்கிழமை கூறும்போது, ''சிரியப் படைகள் மற்றும் ரஷ்யப் படைகள் இணைந்து இட்லிப் மாகாணத்தின் தென்பகுதியில் ஐஎஸ் வசம் உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தின. இந்த நிலையில் ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த முக்கியப் பகுதியை சிரிய அரசுப் படைகள் மீட்டுள்ளன'' என்று தெரிவித்துள்ளது.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர்  நடந்து வருகிறது. இதில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்த உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பலர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ந்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close