[X] Close

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: மீண்டும் ஏவுகணையைத் தாக்கிய வடகொரியா


  • kamadenu
  • Posted: 09 May, 2019 16:08 pm
  • அ+ அ-

வடகொரியா மீண்டும் ஏவுகணையைத் தாக்கி அழித்துள்ளதாக தென்கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்கொரிய ராணுவத் தலைமையகம் தரப்பில் ''வடகொரியாவின் வடமேற்கில் சினோரி பகுதிக்கு அருகில் சுமார் 4.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் குறித்த முழு விவரத்தை தென்கொரியா தரப்பு அளிக்கவில்லை.

முன்னதாக, கடந்த வாரம் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத குறுகிய தூர ஏவுகணையை வடகொரியா தாக்கி அழித்ததாகவும் அமெரிக்கா - வடகொரியா இடையே அணு ஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுகளில் ஏற்பட்ட வெறுப்பின் வெளிப்பாடாக இந்தத் தாக்குதலை வடகொரியா நடத்தி இருக்கலாம் என்றும் தென்கொரியா தெரிவித்தது.

தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதலில் வடகொரியா ஈடுபட்டு வருவதால் கொரிய தீபகற்பப் பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close