[X] Close

முற்றும் மோதல்: ஈரானின் உலோக ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை


  • kamadenu
  • Posted: 09 May, 2019 11:44 am
  • அ+ அ-

அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறியதற்காக ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளில், தங்களிடம் உள்ள மிகுதியான யுரேனியத்தை விற்க வேண்டும் என்பதை நிறுத்தப்போவதாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி அறிவித்தார்.

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் அமெரிக்கா ஈரானின் உலோகப் பொருட்களின் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. இதில் இரும்பு, அலுமினியம் போன்றவை அடங்கும்.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளும் அணு ஆயுத ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளை மீற வேண்டாம் என்று எச்சரித்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, ''உலோகங்களைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈரானுக்கு வருவாய் கிடைக்கிறது. ஈரான் பொருளாதாரத்தில் இது 10%. இந்தப் பொருளாதாரத் தடை மூலம், எங்கள் நாட்டின் துறைமுகங்களில் ஈரான் நாட்டு உலோகங்களை அனுமதிப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்'' என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது.

ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close