[X] Close

குழந்தையை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மெக்கல் தம்பதி


  • kamadenu
  • Posted: 08 May, 2019 17:54 pm
  • அ+ அ-

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மெக்கல் இருவரும் தங்களது குழந்தையை இன்று பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தனர்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெக்கன் மார்கலை கடந்த மே மாதம் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு  திங்கட்கிழமையன்று ஆண் குழந்தை பிறந்தது.

இந்த  நிலையில் தங்கள் குழந்தையை இளவரசர் ஹாரி - மெக்கல் ஆகிய இருவரும் இன்று (புதன்கிழமை) மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

செய்தியாளர்களிடம் ஹாரி மற்றும் மெக்கல் பேசும்போது, “பெற்றோர்கள் என்பது அற்புதமானது. எங்கள் குழந்தையின் பெயரை உலகம் யூகித்துக் கொண்டே இருக்கட்டும்” என்றனர்.

1.jpg 

 தங்களுடைய நான்காவது பேர குழந்தையை காண ஆவலாக இருப்பதாக ஹாரியின் தந்தையான இளவரசர் சார்லஸ் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close