[X] Close

புத்த கோயில்களில் தாக்குதல் நடத்த இருந்த பெண் தற்கொலைப்படை தீவிரவாதிகள்: இலங்கை உளவுத் துறை


  • kamadenu
  • Posted: 08 May, 2019 17:42 pm
  • அ+ அ-

-Indumathy G_50215

இலங்கையில் உள்ள புத்த கோயில்களை தாக்குதல் நடத்த பெண் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக அந்நாட்டு உளவுத் துறைக்கு த

இதுகுறித்து இலங்கை  ஊடகங்கள் தரப்பில், பக்தர்கள் போர்வையில் பெண் தற்கொலைப் படை தீவிரவாதிகள் இலங்கையிலுள்ள புத்த கோயில்களை தாக்க  திட்டமிட்டிருந்ததாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு பிறகு சையிந்தாமுருத்து பகுதியில்  இலங்கை ராணுவம் இல்லம் ஒன்றில் நடத்திய சோதனையில் வெள்ளை நிற ஆடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதனை 3 பெண்கள் அங்குள்ள கடை ஒன்றில் வாங்கியுள்ளன. இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுவரை 5 வெள்ளை நிற ஆடைகள் கைபற்றப்பட்டுள்ளன. மேலும் அங்கு ஆடைகள் இருக்கின்றனவா என கண்காணிப்பு பணியில் இலங்கை உளவுத் துறை இறங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து பெண் தற்கொலைப் படை தீவிரவாதிகள் இலங்கையில் உள்ள புத்த கோயில்களை தாக்க திட்டமிட்டடிருக்கலாம் என உளவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close