[X] Close

ஆப்கானில் சர்வதேச தொண்டு நிறுவனம் மீது தலிபான்கள் தாக்குதல்: 9 பேர் காயம்


9

  • kamadenu
  • Posted: 08 May, 2019 16:31 pm
  • அ+ அ-

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள  தொண்டு நிறுவனம் ஒன்றில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கான் சுகாதாரத் துறை அமைச்சர் கூறும்போது,” ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றில் இன்று (புதன்கிழமை) தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். அப்பகுதி முழுவது புகைமூட்டமாக உள்ளதாக் இதில் வெளி நாட்டினர் யாரேனும் உள்ளனரா என்று உடனடியாக தெரியவில்லௌ” என்று தெரிவித்துள்ளார்.

ரமலானை முன்னிட்டு 175 தலிபான்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி உறுதி அளித்த நிலையில் தலிபான்கள் இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளனர்.

ஆப்கான் அரசுடனான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் பொம்மலாட்டம் என்று  தலிபான்கள் முன்னரே அதனை  மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close