[X] Close

அமெரிக்கா; பள்ளியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; 8 பேர் காயம்


8

  • kamadenu
  • Posted: 08 May, 2019 14:08 pm
  • அ+ அ-

அமெரிக்காவின் கோலராடோ மாகாணத்தில் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில், ''அமெரிக்காவின் கோலராடோ மாகாணத்தில் உள்ள ஸ்டீம் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் பலியானார். 8 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்களும் அப்பள்ளியில் பயின்றவர்கள் என்று நம்பப்படுகிறது.

இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து வெள்ளை மாளிகை வருத்தம் தெரிவித்துள்ளதுடன் அதிபர் ட்ரம்ப்  நிலைமையைக் கண்காணித்து வருகிறார்.

இந்தத் தாக்குதல் குறித்து ட்ரம்ப்பின் மகள் இவன்கா ட்ரம்ப், ''எந்தக் குழந்தையும் ஸ்டீம் பள்ளியில் நடந்த அனுபவத்தைப் பெறக்கூடாது'' என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close