[X] Close

லாகூரில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி; பலர் காயம்


5

  • kamadenu
  • Posted: 08 May, 2019 11:41 am
  • அ+ அ-

பாகிஸ்தானின் லாகூர் நகரில் கிழக்குப் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “ பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள சூஃபி வழிபாட்டுத் தலத்தில் இன்று (புதன்கிழமை) நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்” என்று செய்தி வெளியானது.

தாக்குதலுக்கு உள்ளான சூஃபி வழிபாட்டுத் தலம் தென் ஆசியாவிலேயே பெரியது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளளன.

கடந்த 2010-ம் ஆண்டு தீவிரவாதிகளால் இங்கு நடத்தபட்ட தாக்குதலில் 40க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இந்த நிலையில் மீண்டும் இங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சூஃபி வழிபாட்டாளர்கள் தொடர்ந்து அங்குள்ள தீவிரவாத இயக்கங்களால் தாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close