[X] Close

மர்ம தேசம்: ஒரு மான்ஸ்டரைத் தேடித் திரியும் ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள்


scientists-plan-dna-hunt-for-loch-ness-monster

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 May, 2018 12:42 pm
  • அ+ அ-

ஸ்காட்லாந்து போலீஸார் எப்போதுமே பிரபலம்தான். இப்போது ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் சிலரும் பிரபலமாகியிருக்கின்றனர். காரணம், ஸ்காட்லாந்து மக்கள் ஆழமாக நம்பும் ஒரு மான்ஸ்டரைத் தேடும் பணியை அந்த விஞ்ஞானிகள் குழு முடுக்கிவிட்டிருப்பதே. இந்தக் குழுவில் ஸ்காட்லாந்து விஞ்ஞானிகளுடன் சர்வதேச அளவில் பல விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர்.

சரி, லாக்னெஸ் (Loch Ness) மான்ஸ்டரைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்...

லாக்னெஸ் மான்ஸ்டர் செல்லமாக நெஸ்ஸி என அழைக்கப்படுகிறது. நெஸ்ஸி, ஸ்காட்டிஷ் புராணங்களில் கடல் பாம்பு வகையைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. ஆனால் கழுத்து நீளமாக, மீன்களை உண்ணும் அமைப்புடைய நெஸ்ஸி ஜூராசிக் காலத்தைச் சேர்ந்த ப்ளீஸியோசாரஸ் என்கிற வகையில் எஞ்சி இருக்கும் மிருகமாகக் கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

லாக்னெஸ் இருக்கிறதா இல்லையா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், இன்றளவும் ஸ்காட்லாந்து நாட்டுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் பலரும் எப்படியாவது அந்த மான்ஸ்டரைப் பார்த்துவிட மாட்டோமா என்று படகில் உலா வருவதும் உண்டு.

அடுத்த மாதம் தொடங்குகிறது ஆய்வு..
இன்னும் மர்மமாகவே இருக்கும் லாக்னெஸ் மான்ஸ்டெர் குறித்த ஆய்வு அடுத்த மாதம் மேற்கொள்ளப்படுகிறது. லாக்னெஸ் என்பது ஸ்காட்டிஸ் மேட்டு நிலப்பகுதிகளில் உள்ள ஒரு பிரம்மாண்ட ஏரி. அந்த ஏரியில்தான் அந்த மான்ஸ்டெர் இருப்பதாக நம்புவதால் அந்த மான்ஸ்டெருக்கும் லாக்னெஸ் என்றே பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது விஞ்ஞானிகள் லாக்னெஸ் ஏரியின் குளிர்ந்த தரைப்பரப்பில் இருந்து டிஎன்ஏ மாதிரிகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். விஞ்ஞானிகளின் கூற்றின்படி மீன்களோ, இல்லை எந்தவித நீர்வாழ் உயிரினம் ஆனாலும் அது தண்ணீரில் நீந்தும்போது தோல், செதில்கள், சிறுநீர், மலம் என ஏதாவது ஒரு விதத்தில் டிஎன்ஏ மாதிரியை விட்டுச் செல்லுமாம். அப்படி விடப்பட்ட டிஎன்ஏ மாதிரியை சேமித்து அவற்றையெல்லாம் சோதனை செய்தால் ஏற்கெனவே தெரிந்த உயிரினங்களின் டிஎன்ஏ-வுடன் ஒத்துப்போகாம ஏதாவது டிஎன்ஏ இருந்தால் அதை வைத்து லாக்னெஸ் மான்ஸ்டர் இருக்கிறதா என்பதை உறுதி செய்துவிடலாம் என்கின்றனர்.

முதல் புகைப்படமும் சர்ச்சையும்..
நெஸ்ஸியுடைய முதல் புகைப்படம் லாக்னெஸ் ஏரியில் எடுக்கப்பட்டது. 1934-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹியூக் ரே என்பவரால் புகைப்படம் எடுக்கப்பட்டு அது டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது. ஆனால், அது பின்னாளில் போலி என்று நிரூபிக்கப்பட்டது. ஒரு நீர்மூழ்கிக் கப்பலின் மீது கடல் மான்ஸ்டெரின் மாதிரி பொம்மை ஒன்றை இணைத்து அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டது.

கடந்த 2003-ல் பிபிசி லாக்னெஸ் மான்ஸ்டெர் ஆய்வுக்காக நிதி ஒதுக்கியது. 600 சோனார் பீம்களின் உதவியுடன் சாட்டிலைட்டுகள் மூலம் லாக்னெஸ் மான்ஸ்டெரை கண்டறிய முற்பட்டது. ஆனால், அதில் பலனேதும் இல்லை.
இந்நிலையில்தான், சர்வதேச விஞ்ஞானிகள் குழு அடுத்தமாதம் லாக்னெஸ் ஏரியில் விரிவான ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறது. மர்மம் விலகுமா நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close