[X] Close

ட்ரம்ப் முகமூடி அணிந்து கொள்ளையடிக்கும் மர்ம நபர்: வைரலாகும் வீடியோ


  • kamadenu
  • Posted: 07 May, 2019 16:14 pm
  • அ+ அ-

ஆஸ்திரேலியாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் முகம் கொண்ட மாஸ்க்கை அணிந்து இளைஞர் ஒருவர் கொள்ளையடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது:

''ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கடையை உடைத்துக் கொள்ளையில் ஈடுபட்டார். அப்போது அவர் ட்ரம்ப்பின் முகமூடியை அணிந்திருந்தார். கறுப்புச் சட்டை, கறுப்பு பேண்ட் போட்டிருக்கு அவர் வெள்ளை நிற நைக் ஷூவை அணிந்திருந்தார். கையில் 'உபர் ஈட்ஸ்' பைகளை வைத்திருந்தார்.

நகைக்கடை ஒன்றின் கதவை தன் கையில் உள்ள சுத்தியல் போன்ற சாதனத்தால் உடைக்க முயன்றார். பலமுறை முயன்றும் கண்ணாடிக் கதவு முழுமையாக உடையாததால், காலால் கதவை எட்டி உதைத்துள்ளார்.

கதவு திறக்கப்பட்ட உடன், அங்கு வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த வாட்ச்சுகளைத் திருடியுள்ளார். அத்துடன் எலக்ட்ரானிக் கடை ஒன்றின் கண்ணாடிக் கதவுகளையும் உடைத்துள்ளார். அங்கிருந்தும் விலை மதிப்பற்ற சில பொருட்களைக் களவாடிச் சென்றுள்ளார். திருடிய பொருட்கள் அனைத்தையும் 'உபர் ஈட்ஸ்' பைகளுக்குள் திணித்துக் கொண்டார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு நடந்தது. இதுதொடர்பாக குயின்ஸ்லாந்து காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோவைக் காண

இதற்கிடையே கொள்ளையடித்த நபர் ட்ரம்ப் போன்ற முகமூடி அணிந்து குற்றச்செயலில் ஈடுபட்டதை அடுத்து, நெட்டிசன்கள் அமெரிக்க அதிபரை இதில் இணைத்து விமர்சித்து வருகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close