[X] Close

ஈஸ்டர் தாக்குதல் எதிரொலி: இலங்கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை மக்கள் ஒப்படைக்க கால அவகாசம் நீட்டிப்பு


  • kamadenu
  • Posted: 06 May, 2019 16:19 pm
  • அ+ அ-

கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை ஒப்படைக்க பொதுமக்களுக்கான அவகாசத்தை 48 மணிநேரமாக இலங்கை அரசு  நீட்டித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை ஊடகங்கள் தரப்பில், ''தங்களிடம் உள்ள கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களை பொதுமக்கள் ஒப்படைக்க கால அவகாசம் 48 மணிநேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது'' என்று செய்தி வெளியானது.

இந்தச் செய்தியை இலங்கை செய்தித் தொடர்பாளர் ருவன் குணசேகராவும் உறுதி செய்துள்ளார்.

ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்புக்குப் பிறகு இலங்கையில் அவசர நிலை நீடிக்கிறது. மேலும், சந்தேகத்துக்குரிய நபர்களைக் கைது செய்யவும் ராணுவத்தினர் மற்றும் போலீஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று  இலங்கையில் கிறித்தவ தேவாலயம்,  நட்சத்திர ஓட்டல்கள்  உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 253 பேர் உயிரிழந்தனர். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது.

இலங்கையிலுள்ள என்.டி.ஜே. அமைப்புக்கும் இதில் தொடர்புள்ளதாக இலங்கை அரசு அந்த அமைப்பைத் தடை செய்தது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close