[X] Close

பாகிஸ்தானில் பாப்கார்ன் விற்பவர் தயாரித்த விமானம்


  • kamadenu
  • Posted: 06 May, 2019 15:41 pm
  • அ+ அ-

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் முகமது ஃபயாஸ். இவர்  ரிக்‌ஷா மற்றும் இதர பொருட்களின் உதவியுடன் விமானம் ஒன்றை வடிவமைத்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

தொலைக்காட்சியிலும், இணையத்திலுள்ள புளு பிரிண்ட்களைப் பார்த்தும் இந்த விமானத்தை முகமத் ஃபயாஸ் உருவாக்கியுள்ளார்.

ஃபயாஸின் கண்டுபிடிப்பைப் பாராட்டி அதற்கு அங்கீகாரம் அளிப்பதற்காக பாகிஸ்தான் விமானப் படையினர் அவரைப் பலமுறை சந்தித்துள்ளனர். இது தொடர்பான சான்றிதழையும் பாகிஸ்தான் விமானப் படை அவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது.

இதுகுறித்து முகமது ஃபயாஸ் கூறும்போது, ''நான் சிறுவனாக இருக்கும்போது விமானத்துறையில் சேர விரும்பினேன். ஆனால், அது நனவாகவில்லை.

நான் சிறுவனாக இருக்கும்போது என் தந்தை இறந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து படிப்பைவிட்டு எனது குடும்பத்தைப் பார்த்துக்கொண்டேன். ஆனால், வளர்ந்த பின்பு என் ஆசை குறையவில்லை. எனவே செக்யூரிட்டி வேலை, பார்கார்ன் விற்பது என பல வேலைகளைச் செய்தேன். இதில் சேர்த்துவைத்த பணத்தைக் கொண்டு இந்த விமானத்தை உருவாக்கினேன்'' என்றார்.

பாகிஸ்தானின் தபுர் கிராமத்தில் முகமது ஃபயாஸின் கண்டுபிடிப்பைப் பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு பார்வையாளர்கள் தினமும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close