[X] Close

வெனிசுலா விவகாரம்: தேவைப்பட்டால் அமெரிக்க ராணுவ தலையீட்டை கேட்பேன் - கைடோ


  • kamadenu
  • Posted: 06 May, 2019 14:18 pm
  • அ+ அ-

வெனிசுலா விவகாரத்தில் தேவைப்பட்டால் அமெரிக்க ராணுவ தலையீட்டை கேட்க தயாராக இருப்பதாக  அந்நாட்டு எதிர்க் கட்சித் தலைவர் கைடோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கைடோ தனியார் தொலைக்காட்சிக்கு பேசும்போது, “அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  நிலைப்பாடு மிகவும் உறுதியானது. நான் அதனை பாராட்டுக்கிறேன்” என்றார்.

வெனிசுலா விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை நீங்கள் விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு, “  நான் அதிபராக பொறுப்பு எடுத்துக் கொண்டால் தேவைப்பட்டால் அனைத்து வாய்ப்புகளை  நிச்சயம் மதிப்பீடு செய்வேன்” என்றார்.

கடந்த வாரம் வெனிசுலா ராணுவத்தினரை அதிபர் மதுரோவுக்கு எதிரான  முயற்சியில் கைடோ தோல்வி அடைந்தது குறிப்பிடட்தக்கது.

இந்த நிலையில் வெனிசுலா விவகாரத்தில் அமெரிக்க ராணூவத்தின் தலையீட்டை தான் விரும்பவில்லை என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் புதினும் வெனிசுலா விவகாரத்தில் ராணுவ தலையீட்டை எதிர் நோக்கவில்லை

மேலும் ரஷ்ய அதிபர் புதினும் வெனிசுலா விவகாரத்தில் ராணுவ தலையீட்டை எதிர் நோக்கவில்லை அதற்கு மாறாக வெனிசுலாவில் நல்ல நிகழ்வு நடப்பதை காணவே புதின் விரும்புவதாக அவர் உறுதி அளித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு  மே மாதம் நடந்த நடந்த தேர்தலிலும் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றிருப்பதாக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன.

கடும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றாலும், அரசியல் நிலையற்ற தன்மையாலும் வெனிசுலா திண்டாடி வருகிறது. மதுரோவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து வீதிகளில் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் கைடோ அமெரிக்கா ஆதரவுடன் தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டு சர்வதேச நாடுகளின் உதவியுடன் வெனிசுலா மக்களுக்கு மனிதாபிமானம் அடிப்படையில் உதவி வழங்க வேண்டும் என்றும் கூறி வருகிறார். இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் வெனிசுலா மீது அமெரிக்கா கடந்த மாதம் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close