[X] Close

ரஷியாவில் விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்ததில் 41 பயணிகள் உடல் கருகி பலி


41

  • kamadenu
  • Posted: 06 May, 2019 09:27 am
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஷெரிமெட்யேவ் விமானநிலையத்தில் அவசரமாக தரையறங்கிய பயணிகள் விமானத்தில் தீப்பிடித்ததில் 41 பேர் உடல் கருகு பலியானார்கள்.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஷெர்மெட்யேவ் விமான நிலையத்தில் இருந்து ஏரோபிளாட் என்ற விமான நிறுவனத்துக்கு சொந்தமான சுகோய் சூப்பர்ஜெட்-100 ரக விமானம் 73 பயணிகளுடன்  முர்மான்க்ஸ் நகரத்துக்கு நேற்று மாலை 6.02 மணிக்குப் புறப்பட்டது.

விமானம் புறப்பட்டு வானத்தில் பறந்து கொண்டிருந்த நிலையில், எஞ்சனில் ஏதோ கோளாறு இருப்பதை அறிந்த விமானி, மீண்டும் ஷெர்மெட்யேவ் விமானநிலையத்தில் விமானத்தை தரையிறங்க அனுமதி கோரினார். அதற்கு விமான நிலைய அதிகாரிகள் சம்மதிக்கவே, விமானத்தை அவசரமாக தரையிறங்கினார்.

விமானம் தரையிறங்கியபோது, திடீரென விமானத்தில் தீ பிடித்தது. ஓடுதளத்தில் விமானம் வேகமாக செல்லும்போது தீ வேகமகப் பரவியது. விமானத்தில் தீப்பிடித்ததைப் பார்த்த விமான நிலைய தீயணைப்பு படையினர், மீட்டுப்படையினர் உடனடியாக வந்து தீயையை அணைத்தனர்.

மேலும், விமானத்தில் தீவிபத்து ஏற்பட்டவுடன் அவசர வழியாக விமான ஊழியர்கள் பயணிகளை தப்பிக்கவைத்தனர். ஆனாலும், அனைத்து பயணிகளையும் அவர்களால் வெளியேற்ற முடியவில்லை. தீ வேகமாக எரிந்ததால், 2 குழந்தைகள், 2 விமான ஊழியர்கள் உள்பட 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 38 பேர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

russia.jpg 

ரஷியாவின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தலைமை அதிகாரி வெரோனியா வோர்ட்சோவா கூறுகையில், " விமானத்தின் தீவிபத்தில் இருந்து காயங்களுடன் 6 பயணிகள் மீட்கப்பட்டனர். இதில் 3பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இந்தவிபத்து குறித்து ஏரோபிளாட் விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், " மாஸ்கோவின் ஷெர்மட்யேவ் விமானநிலையத்தில் இருந்து 73 பயணிகளுடன் முர்மான்ஸ்க் நகருக்கு நேற்று மாலை 6.02 மணிக்குப் புறப்பட்ட சுகோய் சூப்பர்ஜெட்-100 ரக விமானம் தொழில்நுட்ப காரணங்களால் மீண்டும் ஷெர்மட்யேவ் விமானநிலையத்தில் தரையிறங்கியது.

அப்போது தீவிபத்து ஏற்பட்டது. விமான ஊழியர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியைச் செய்தார்கள். இருப்பினும் 41 பேர் பலியானார்கள். இதில் 2 விமான ஊழியர்களும் அடங்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக மாஸ்கோ போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்துக் குறித்து அறிந்த ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close