[X] Close

அமெரிக்காவில் 130 பயணிகளுடன் ஆற்றில் தரையிறங்கிய விமானம்


130

  • kamadenu
  • Posted: 04 May, 2019 14:17 pm
  • அ+ அ-

130 பயணிகளுடன் சென்ற விமானம்  ஒன்று அமெரிக்காவில் ஆற்றில் தரையிறங்கிய சம்பவம்  நடந்துள்ளது. எனினும் இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ''கியூபாவிலிருந்து 130 பயணிகளுடன் சென்ற போயிங் 737 விமானம் ஃபுளோரிடாவில் உள்ள  செயின்ட் ஜான்ஸ் ஆற்றில் தரையிறங்கியது. இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்தில் காயமடைந்த 20க்கும்  மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்திலிருந்த மீண்ட பயணி ஒருவர் கூறும்போது, ''நாங்கள் பயணம் செய்த விமானம் கீழே வந்தது. அது தரையை வேகமாக மோதியது. விமானம் அதன் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது'' என்றார்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close