[X] Close

ஏவுகணையைத் தாக்கி அழித்த வடகொரியா; அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின் தோல்வி எதிரொலியா? தென்கொரியா தகவல்


  • kamadenu
  • Posted: 04 May, 2019 11:15 am
  • அ+ அ-

குறுகிய தூர ஏவுகணையை வடகொரியா தாக்கி அழித்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்கொரியா தரப்பில், ''கிழக்கு கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத குறுகிய தூர ஏவுகணையை வடகொரியா தாக்கி அழித்துள்ளது.

அமெரிக்கா - வடகொரியா இடையே அணு ஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுகளில் ஏற்பட்ட வெறுப்பின் வெளிப்பாடாக இந்தத் தாக்குதலை வடகொரியா நடத்தி இருக்கலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து தென்கொரியா, அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை அந்த ஏவுகணை எந்த நாட்டைச் சேர்ந்தது என்று தெரியவில்லை.

வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில்  கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும்  எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் இந்தத் தாக்குதலை வடகொரியா நடத்தியுள்ளது.

அமெரிக்கா, வடகொரியா மோதலும் இணக்கமும்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.

இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் - கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close